மாடல் அழகி மரண வழக்கில் லீக் ஆன ஆடியோ ஆதாரம்! நீதிபதி மாமியார் மருமகளிடம் கேட்ட கேள்வி? திடுக்கிடும் தகவல்கள்....!!!
மத்தியப் பிரதேசத்தில் நடிகை திவிஷா சர்மா வரதட்சணை வழக்கில் புதிய திருப்பம். ஓய்வு பெற்ற நீதிபதி பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திவிஷா சர்மா வரதட்சணை வழக்கில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நடிகையின் மாமியாரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரி பாலா சிங் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதையடுத்து வழக்கின் மீது மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த முன்னாள் மாடல் மற்றும் தெலுங்கு நடிகையான திவிஷா சர்மா, போபாலைச் சேர்ந்த சமர்த் சிங்கை கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, தன்னை வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கியதாக திவிஷா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
வெளியான ஆடியோவில் கடும் வாக்குவாதம்
தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில், கிரி பாலா சிங் மற்றும் திவிஷாவின் சகோதரரான ராணுவ மேஜர் ஹர்ஷித் சர்மா இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அந்த உரையாடலில், திவிஷாவின் கடந்தகால உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கிரி பாலா சிங் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பார்க்கவே அசிங்கமா இருக்கு....மாணவியுடன் மதபோதகர் செய்த அருவருப்பான செயல்! சிக்கிய சிசிடிவி காட்சியால் பெற்றோர்கள் போராட்டத்தில்...!!!
அதற்கு பதிலளித்த ஹர்ஷித் சர்மா, “ஒரு வீட்டின் மருமகளிடம் இப்படிப் பேச முடியுமா?” என எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து, “மருமகளின் ஒழுக்கம் குறித்து கேட்க எனக்கு உரிமை உள்ளது” என்று ஓய்வு பெற்ற நீதிபதி பதிலளித்ததாகவும் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.
கணவர் மீது தேடுதல் தீவிரம்
இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளான திவிஷாவின் கணவர் சமர்த் சிங் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கண்டுபிடிக்க போபால் போலீஸ் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையை ரத்து செய்து, தற்போது ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தகவலின்படி, அவரை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாத வகையில் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு முழு நீதி கிடைக்கும் என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஏற்கனவே உறுதியளித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள ஆடியோ காரணமாக, விசாரணை மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.