மருந்து வாங்க கடைக்கு சென்றவரை மடக்கி பிடித்து செல்போனை உடைத்து கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்!! வைரல் வீடியோ
மருந்து வாங்க கடைக்கு சென்றவரின் செல்போனை உடைத்து, அவரை கன்னத்தில் ஆராய்ந்துள்ளார் ம
மருந்து வாங்க கடைக்கு சென்றவரின் செல்போனை உடைத்து, அவரை கன்னத்தில் ஆராய்ந்துள்ளார் மாவட்ட ஆட்சியர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.
சட்டிஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவரது வாகனத்தை மடக்க, வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா அவர் மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார்.
அதுமட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞரை ஓங்கி கன்னத்திலும் அறைந்துள்ளார். பின்னர் போலீசாரும் அந்த இளைஞரை தாக்கியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், அதனாலயே அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததாகவும், அவர் மீது அதிவேகமாக சென்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.