×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

களத்தில் டோனி மிஸ்டர் கூல் இல்லை... டோனி குறித்து கூறிய இஷாந்த் ஷர்மா....!!

களத்தில் டோனி மிஸ்டர் கூல் இல்லை... டோனி குறித்து கூறிய இஷாந்த் ஷர்மா....!!

Advertisement

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இஷாந் ஷர்மா 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்டுகளையும், 14 டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

இந்நிலையில், "தோனி பற்றி", ‌கூலாக வலம் வரும் முன்னாள் இந்தியா கேப்டன் எம்.எஸ் டோனி மிஸ்டர் கூல் இல்லை என்றும், அவர் அடிக்கடி அவதூறான வார்த்தைகளை பேசுவார் என்றும் இஷாந்த் சர்மா கூறியுள்ளார். 

தோனி பற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார்;-
மஹி பாய்க்கு பல பலங்கள் உள்ளன. ஆனால் அமைதியும், கூலாக இருப்பது அவற்றில் ஒன்றல்ல. அவர் களத்தில் அடிக்கடி கெட்ட வார்த்தைகளைப் பேசுவார். அதை நான் நேரில் கேட்டிருக்கிறேன். 

இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி அவரைச் சுற்றி எப்போதும் வீரர்கள் இருப்பார்கள்.

மஹி பாயுடன் எப்போதும் யாரேனும் ஒருவர் அமர்ந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். இது நமது கிராமத்தில் மரங்களைச் சுற்றி அமர்ந்து இருப்பது போன்ற ஒரு உணர்வு தான். 

கோபப்படுவது அவரது வழக்கம் இல்லை. ஒரு டெஸ்ட் போட்டியின் போது நான் த்ரோவை சரியாக அடிக்காததால் அவர் கோபமடைந்தார். அவரை கோபமாக நான் பார்த்ததில்லை. 

ஆனால் நான் பந்தை அவரிடம் வீசும் போது அது கீழே போனது. நான் முதல் முறை பந்து வீசியபோது, நான் அவர் கோபமடைந்ததை பார்த்தேன். இரண்டாவது முறை பந்து வீசிய போது அது இன்னும் அதிகமாக இருந்தது. மூன்றாவது முறையாக வீசிய போது அதைக் கையில் கொடுங்கள் என்றார். அவர் அதை திட்டும் விதமாக சொன்னார். என்று தோனி குறித்து அவர் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #cricket #Ishant Sharma said about Dhoni
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story