காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொடூர கொலை.. காதலன் வெறிச்செயல்.. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்.!
Delhi College Girl Murder: கல்லூரி மாணவியை கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த காதலன் காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
காதல் பிரச்சனை:
டெல்லியில் உள்ள திலக் நகரில் வசித்து வருபவர் முஸ்கான் சர்மா (வயது 21). இவர் கல்லூரி மாணவி ஆவார். பகுதி நேரமாக மாடலிங் & பேஷன் கன்டென்ட் கிரியேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் ஆசையால் கணவருக்கு சமாதிகட்டிய மனைவி.. கொன்று புதைத்த பயங்கரம்.!
காதல்:
அங்குள்ள ஜிம் ஒன்றில் டிரையினராக வேலை பார்த்து வருபவர் இம்ரான். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதல் உறவில் இவர்கள் இருந்துள்ளனர்.
போதைப்பழக்கம்:
இதனிடையே, இம்ரானுக்கு போதைப்பொருள் பழக்கம் மற்றும் தவறான நடத்தை இருப்பதை அறிந்த முஸ்கான் - காதலனிடம் கேட்டபோது தகராறு உண்டாகி இருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் முஸ்கான் இம்ரானை விட்டு விலக முயற்சி செய்துள்ளார்.
கொலை:
இதனால் ஆத்திரமடைந்த இம்ரான், முஸ்கான் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். பின் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் வயிறு உட்பட உடல் பகுதியில் பலமுறை கொடூரமாக குத்திக்கொலை செய்து தப்பியோடி இருக்கிறார்.
விசாரணை:
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் முஸ்கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இம்ரானை தேடி வந்த அதிகாரிகள், கொடூர குற்றவாளியை சுட்டுப்பிடித்தனர். அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றபோது, காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றதால் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கணவரை குத்திக்கொன்று குடலை உருவிய விபரீதம்.. பிள்ளைப்பேறுக்காக அமானுஷ்ய மனைவியின் அதிரவைக்கும் செயல்.!