×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேதி குறிச்சாச்சு... மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.2,500.. ! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

டெல்லியில் லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதையடுத்து தமிழக மகளிர் உரிமைத் திட்டம் குறித்தும் புதிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Advertisement

டெல்லி அரசின் Delhi Lakshmi Yojana திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரக்‌ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

ரூ.2,500 உதவித்தொகை எப்படி வழங்கப்படும்?

புதிய திட்டத்தின்படி, மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,500-ல் ரூ.1,000 நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மீதமுள்ள ரூ.1,500 தொகை மூன்று ஆண்டுகள் வரை எடுக்க முடியாத தொடர் வைப்புநிதி கணக்கில் சேமிக்கப்படும். அந்த காலம் நிறைவடைந்த பிறகு, வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.58,000 வரை பயனாளிகள் பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்திலும் அதிகரிக்குமா எதிர்பார்ப்பு?

தமிழகத்தில் தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

பொதுமக்கள் மத்தியில் எழும் கேள்விகள்

டெல்லி அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலும் மகளிர் நிதியுதவி தொகை உயர்த்தப்படுமா அல்லது கூடுதல் சேமிப்பு வசதியுடன் புதிய நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 

இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சி! திடீரென அக்கவுண்ட்டில் விழுந்த ரூ.1000.....செம ஹாப்பியில் பெண்கள்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Delhi Lakshmi Yojana #மகளிர் நிதியுதவி #Delhi government #கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் #Women Welfare
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story