மீண்டும் மீண்டும் கொடூரம்.. ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தலைநகரில் அதிர்ச்சி.!
Delhi Woman Gang Rape Bus: ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
தலைநகரில் ஆட்சிகள் மாறினாலும், அவலங்கள் மாறவில்லை. டெல்லியில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இரவு வேலை முடிந்து வரும்போது..
Delhi Gang Rape: டெல்லியில் உள்ள மல்கோல்புரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், பெண் ஒருவரும் வேலை பார்க்கிறார். இவர் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து, சரஸ்வதி விகார் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார்.
இதையும் படிங்க: வேலைக்கு வந்த இடத்தில்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் திடுக் சம்பவம்.!
இழுத்துச் சென்று கொடுமை:
பெண் காத்திருந்த வழித்தடத்தில் பேருந்து நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் அங்கிருந்த தனியார் ஆம்னி பேருந்துக்கு அருகில் சென்று, நடத்துனரிடம் நேரம் கேட்டுள்ளார். அந்த நபரோ பெண்ணுக்கு நேரம் சொல்வதை விடுத்து, லிப்ட் தருவதாக கூறியுள்ளார். பெண் தனியாக செல்ல அஞ்சிய நிலையில், பெண்ணை ஓட்டுனரும்-நடத்துனரும் பேருந்துக்குள் ஏற்றி வேகமாக சென்றுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை:
பின் ஓடும் பேருந்தில் பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் பெண்ணை நாங்கலாய் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இந்த விஷயம் குறித்து பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பேருந்தை அடையாளம் கண்டு ஓட்டுநர், நடத்துனரை அதிரடியாக கைது செய்தனர். பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட பெண்ணுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்பத்துக்காக கணவன்-மனைவியாக வேலைக்குச் சென்று வந்துள்ளனர். அப்போது, பெண்ணுக்கு இந்த சோகம் நடந்துள்ளது.
டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கொடுமைகள் தொடர்கதையாவது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!