மைக்ரோ ஓவனுக்குள் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு - பதறவைக்கும் அதிர்ச்சி தகவல்.!
மைக்ரோ ஓவனுக்குள் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு - பதறவைக்கும் அதிர்ச்சி தகவல்.!
பிறந்து 2 மாதங்களே ஆகிய பச்சிளம் குழந்தையின் உடல் மைக்ரோ ஓவனுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில், அதிகாரிகள் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிராத் தில்லி பகுதியில், வசித்து வரும் பெண்மணி குல்ஷன் கவுசிக். இவரின் வீட்டில் பிறந்து 2 மாதங்களே ஆகிய பச்சிளம் பெண் குழந்தை மைக்ரோ ஓவனுக்குள் இறந்து கிடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குழந்தையின் தாயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தை பிறந்ததால் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.