×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தை கடத்தல், பாலியல் தொழில், ஆபாச வீடியோ.. கடத்தல் கும்பல் பரபரப்பு கைது., பகீர் தகவல்கள்..!

குழந்தை கடத்தல், பாலியல் தொழில், ஆபாச வீடியோ.. கடத்தல் கும்பல் பரபரப்பு கைது., பகீர் தகவல்கள்..!

Advertisement

சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் தள்ளி, வீடியோ எடுத்து ஆபாச தலங்களுக்கு விற்பனை செய்து வந்த கும்பல், 1 வயது குழந்தையை விற்பனை செய்கையில் கைதானது.

டெல்லியில் உள்ள மல்கோபுரி நகரில், பிறந்து ஒருமாதமேயாகும் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாற்று சீருடையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது, அங்கு தம்பதி இருந்த நிலையில், அவர்களை பார்க்க வந்த 2 பெண்கள் கும்பல் தங்களின் கைகளில் குழந்தையுடன் வந்து, குழந்தையை நின்று கொண்டு இருந்த தம்பதியிடம் விற்பனை செய்து பணம் வாங்கியுள்ளது. இதனைக்கண்ட அதிகாரிகள், குழந்தையை விற்பனை செய்ய முயன்ற இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

அங்கு நடந்த விசாரணையில், குழந்தையை விற்பனை செய்ய கொண்டு வந்த 2 பெண்களும், ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது அம்பலமானது. குழந்தையை கடத்தி விற்பனை செய்வது, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதனை வீடியோ எடுத்து ஆபாச தளங்களில் விற்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்பது உறுதியானது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், குழந்தை கடத்தல், பாலியல் தொழிலில் தள்ளுதலில் ஈடுபட்டு வரும் பிரவீன் காட்டூன் (வயது 45), சதிஷ் (வயது 35) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #India #child #Woman Traffic #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story