×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

13 முறை சதக்., சதக்.. காதலியை கத்தியால் குத்தி, இரத்த வெள்ளத்தில் பதறவைத்த காதலன்; டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.!

13 முறை சதக்., சதக்.. காதலியை கத்தியால் குத்தி, இரத்த வெள்ளத்தில் பதறவைத்த காதலன்; டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சார்ந்தவர் கௌரவ் பால் (வயது 27). இவர் டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். 

இவரின் நிறுவனத்தில் 23 வயதுடைய இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்த நிலையில், இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே காதலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பணியை விடுத்துவிட்டு வேறொரு இடத்தில் பெண்மணி வேலை தேடி வந்துள்ளார். 

மேலும், திருமணத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று நேர்காணலுக்கு காரில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த கௌரவ் பால், திருமணம் குறித்து பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தான் திட்டமிட்டபடி எடுத்துச் சென்ற கத்தியால் 13 முறை காதலியை சரமாரியாக குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் உயிருக்கு துடிதுடித்த காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கௌரவ பால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பதிக்கப்பட்ட பெண்மணி இரத்த வெள்ளத்தில் காரில் இருந்தபடி தன்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டி கோரிக்கை வைத்த அதிர்ச்சி விடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. நமது பக்கத்தில் வீடியோ இணைக்கப்படவில்லை.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #India #Love #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story