உஷார் மக்களே! பட்டப்பகலில் டெலிவரி ஊழியர்கள் போல் நகைக்கடையில் நுழைந்த 2 திருடர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
உஷார் மக்களே! பட்டப்பகலில் டெலிவரி ஊழியர்கள் போல் நகைக்கடையில் நுழைந்த 2 திருடர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள நகைக்கடையில் நடந்த அதிரடி கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் 3.30 மணியளவில், ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியர் வேடத்தில் இரண்டு பேர் ஹெல்மெட் அணிந்து கடையில் நுழைந்துள்ளனர்.
அவர்கள் முன்னமேயே திட்டமிட்டபடி நகைகளை எடுத்துவைத்து பைகளில் நிரப்பி, பின்னர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சத்தமில்லா கொள்ளையின் முழு வீடியோ கடையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவாகியுள்ளது.
போலிஸாரின் தகவலின்படி, இந்த கொள்ளையில் சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொள்ளையர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண்! நைசாக நோட்டமிட்டு பின்தொடர்ந்த மர்ம நபர்கள்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! பதறவைக்கும் வீடியோ...
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களும், நகைக்கடை உரிமையாளர்களும் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக வலியுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: மூன்று வயது குழந்தையை தலைகீழாக தூக்கி கொடூரமாக தெருவில் நடந்து சென்ற தந்தை! அதிரவைக்கும் காரணம்! நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி...!