×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனோ முகாமில் நடன நிகழ்ச்சி! பெண்களை அழைத்து வந்து அட்டூழியம்! வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

dancer called in corono quarantine center for entertainment

Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இத்தகைய கொடிய வைரஸை கட்டுப்படுத்த  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 4வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும், சமூக விலகலை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து  அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தி, 14 நாட்கள் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பீகாரின் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா என்ற கிராமத்தில் மாநில அரசின் சார்பில் கொரோனா முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு  கொரோனா அறிகுறி கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பொழுதுபோக்கிற்காக சிலர் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொரோனோ முகாமில் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், சம்பத்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர்  தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பொழுதுபோக்கிற்காக டிவி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono quarantine #Dance show #Bihar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story