×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அப்பாவி பெண்கள் தான் டார்கெட்..." கால் சென்டர் பெயரில் ஆபாச ஸ்டூடியோ.!! பல லட்சம் வியாபாரம்.!! தட்டி தூக்கிய சைபர் கிரைம்.!

அப்பாவி பெண்கள் தான் டார்கெட்... கால் சென்டர் பெயரில் ஆபாச ஸ்டூடியோ.!! பல லட்சம் வியாபாரம்.!! தட்டி தூக்கிய சைபர் கிரைம்.!

Advertisement

ஆந்திர மாநிலத்தில் கால் சென்டருக்கு வரும் பெண்களை ஆபாச படமெடுத்து அதனை இணையதளங்களில் விற்ற நபர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 நபர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கால் சென்டரில் வேலை

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் மற்றும் ஜோஸ்னா ஆகியோர் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவிற்கு வேலை தேடி சென்றுள்ளனர். அப்போது இவர்களுக்கு பெங்களூரை சேர்ந்த லூயிஸ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது கால் சென்டர் நடத்தி வரும் லூயிஸ் இளம் பெண்களை ஆபாசமாக படமெடுத்து இணையதளத்தில் விற்றால் விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என கூறியிருக்கிறார்.

ஸ்டுடியோ அமைத்து ஆபாச படங்கள் விற்பனை

இதனைத் தொடர்ந்து அவரது கால் சென்டரில் வேலை செய்யும் இளம் பெண்களை மயக்கி ஜோஸ்னா மற்றும் கணேஷ் ஆகியோர் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை பிரபல ஆபாச இணையதளத்தில் விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் 3 பேரும் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் வெறி.!! "கணவனை கொன்று பாம்பை கடிக்க விட்ட கொடூரம்..." மனைவி, காதலன் கைது.!!

சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

இந்தக் குற்றம் பற்றிய தகவல் கிடைத்ததும் ஆந்திராவின் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி கால் சென்டர் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி ஆபாச படமெடுத்து விற்பனை செய்த கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 27 லட்ச ரூபாய் சம்பாதித்ததாக தெரியவந்திருக்கிறது. மேலும் இந்தக் குற்றம் தொடர்பாக இவர்களது பின்னணியில் யாரும் இருக்கிறார்களா.? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "அப்பா... விட்ருங்க ப்ளீஸ்..." 13 வயது மகள் பாலியல் பலாத்காரம்.!! வளர்ப்பு தந்தை கைது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Andhra Pradesh #bengaluru #Crime #Poor Girls #Adult Video Sales #Cyber crime #3 People Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story