×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ATM மெஷின்ல இருந்துகூட கொரோனா வைரஸ் பரவும்..! புது தகவலை கூறிய வல்லுநர்..! மக்களே உஷார்.!

Corono may spread from ATM machines

Advertisement

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70 கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த கூட்டம் சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை பூச்சியியல் முதுநிலை வல்லுநர் மணிவர்மா.

கொரோனா பற்றி அவர் கூறுகையில், இதுவரை 650 கொரோனா வைரஸ்கள் உள்ள நிலையில் தற்போது வந்துள்ளது 651 என்றும், 1960 ஆம் ஆண்டே நாம் கொரோனா வைரஸை சந்தித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த வைரஸ் கிருமியானது விலங்குகளிடமிருந்தோ, பூச்சிகளிடமிருந்தோ மற்ற உயிர்களுக்கு பரவுவது இல்லை என்றும், சுத்தத்தைக் கடைபிடிக்காத மனிதர்களிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவும் என்றும் விளக்கியுள்ளார்.

மேலும், கழிவறையில் இருக்கும் கிருமிகளுக்கு நிகரான கிருமியானது ATM இயந்திரத்தில் பின் நம்பர் பதிகின்ற இடத்தில் இருப்பதாகவும், கொரோனா பாதித்த ஒருவர் இதை பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கும் ATM மூலம் கொரோனா தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #Corono in ATM
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story