×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மரத்தில் கட்டிலை கட்டி, வசித்து வரும் கொரோனோவால் பாதிக்கப்பட்ட இளைஞர்! அவர் கூறிய அதிர்ச்சி காரணம்!!

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா என்ற கிராமத்தில் சிவா என்ற 25 வயது நி

Advertisement

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா என்ற கிராமத்தில் சிவா என்ற 25 வயது நிறைந்த நபர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் 4 பேர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால் அவரது வீடு சிறிதாகவும், ஒரு அறை மட்டும் இருந்ததால் அங்கும் தங்கமுடியவில்லை. அதனால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தின் மேல் கட்டிலை கட்டி தங்கி வந்துள்ளார்.

    

இவ்வாறு இரண்டு நாட்களாக மரத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கயிற்றில் கட்டி அவரது குடும்பத்தார்கள் கொடுத்து வந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tree
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story