கப்பலில் தவிக்கும் 138 இந்தியர்கள்! 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!
corona virus attack increased

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் இந்த வைரஸ் தற்போது வெவ்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கு சென்றுவிட்டு வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை ஜப்பான் தனது பகுதிக்குள் அனுமதிக்காமல் நடுக்கடலில் நிறுத்தி வைத்துள்ளது. அந்த கப்பலில் பயணம் செய்த 80 வயது முதியவருக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியபட்டு, கப்பலில் இருந்த 3,711 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
கப்பலில் இருக்கும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டதில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கப்பலில் பணியாற்றும் 2 இந்தியர்களுக்கும் பாதிப்பு இருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கப்பலில் உள்ளவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்த சொகுசு கப்பலில் 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் உட்பட 138 இந்தியர்கள் கப்பலில் உள்ளனர்.