×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவில் வேகமாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு.! கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எவ்வளவு.?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,010  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் இதுவரை 99 லட்சத்து 56 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 355 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 451ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story