மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
corona increased in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511- ஆக உள்ளது. இதுவரை 10 97,374 கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 6.42 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, சோதனைகளைப் பொருத்தவரை அதிகபட்ச ஒரு நாள் எண்ணிக்கை இது.