இந்தியாவில் வேகமாக அதிகரித்துவரும் கொரோனா! கிடுகிடுவென உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!
Corona increased in india

இந்தியாவில் கொரோனாவால் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பேரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஒரே நாளில் இந்த வைரஸ் தொற்றால் 3,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,662 ஆகவும், பலி எண்ணிக்கை 1,981 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.