×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வகுப்பறையில் உதட்டுமுத்தம்.. அரசு பள்ளி ஆசிரியர்கள் சர்ச்சை... வைரலான வீடியோவால் அதிர்ச்சி.!

வகுப்பறையில் உதட்டுமுத்தம்.. அரசு பள்ளி ஆசிரியர்கள் சர்ச்சை... வைரலான வீடியோவால் அதிர்ச்சி.!

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் கண்ணோஜ் மாவட்டத்தில் உள்ள சௌரிக் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுத் தொடக்கப் பள்ளி தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி வகுப்பறைக்குள் ஒரு ஆண் ஆசிரியரும், பெண் ஆசிரியரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய இடமான பள்ளியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது அந்த ஆண் ஆசிரியரின் மனைவிதான் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆபீஸ் நேரத்துல அடிக்குற கூத்த பாருங்க.... வங்கி மேலாளர் அறையிலே இப்படியா? அதிர்ச்சி வீடியோ...!!!

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கணவன்-மனைவிக்கிடையே குடும்பத் தகராறு நீடித்து வருவதாகவும், வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், தற்போது வைரலாகும் இந்த வீடியோ சமீபத்தில் பதிவு செய்யப்பட்டதல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது எப்போது பதிவு செய்யப்பட்டது, யார் பதிவு செய்தார்கள் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆண் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் விசாரணைக் குழுவை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இது பள்ளி அறையா? இல்லை படுக்கை அறையா? வகுப்பறையில் அத்துமீறிய 2 ஆசிரியர்கள்.... இணையத்தில் வைரலாகும் வீடியோவால் கொந்தளிப்பில் பெற்றோர்கள்.! கல்வித்துறையில் பரபரப்பு.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #viralvideo #school #Education
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story