×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigNews: காங்கிரஸ் எம்.எல்.ஏவை கைது செய்தது அசாம் மாநில காவல்துறை.. அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சி.. நள்ளிரவில் நடவடிக்கை.!

#BigNews: காங்கிரஸ் எம்.எல்.ஏவை கைது செய்தது அசாம் மாநில காவல்துறை.. அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சி.. நள்ளிரவில் நடவடிக்கை.!

Advertisement

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வை காவல் துறையினர் மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் வடாகம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவாணி அசாம் மாநிலத்தின் கோக்ரஜாஹர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 11:30 மணியளவில் வடாகத்தில் உள்ள பாலன்பூர் குடியிருப்பில் தங்கியிருந்த எம்.எல்.ஏ-வை கைது செய்துள்ளனர்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே, அசாம் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கைது நடவடிக்கை நடந்துள்ளது. இவரை கவுகாத்தியில் இருந்து இரயில் உதவியுடன் அசாம் மாநிலத்திற்கு அழைத்துச்செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

அவரின் கைது தொடர்பான பிற விபரங்கள் சிறிது நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவாணி உள்ளூர் தலித் அமைப்பின் தலைவராகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#congress #Vadgam #MLA Jignesh #Assam Police #gujarat #India #politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story