தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போன ஜென்மத்திலேயே.. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட நித்யானந்தா.! அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார்!!

complaint on nithyannda for stoling statue

complaint-on-nithyannda-for-stoling-statue Advertisement

நித்யானந்தா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அவர் என்ன கூறினாலும் அது வைரலாகி பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் நித்யானந்தா தியான பீடத்தின் நிறுவனரான இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என சமாளித்தார்.

அதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் நான் தியானத்தை முடிக்க சிறிது தாமதம் ஆகிவிட்டதால்  சூரியனை உதிக்ககூடாது என கட்டளையிட்டேன். அதனால் சூரியன் 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என கூறி சர்ச்சையை கிளப்பினார். மேலும் அதனை தொடர்ந்து அண்மையில் வீடியோ ஒன்றில் மேட்டூர் அணையில் நீர் வற்றினால், நந்தி சிலை வெளியே தெரியும். அந்த சிலையை கொண்ட சிவன் கோவிலை நான்தான் போன ஜென்மத்தில் கட்டினேன். மேலும் அந்த கோவிலின் மூலவரான சிவலிங்கம் தன்னிடம்தான் உள்ளது எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

nithyananda

இந்நிலையில் மேட்டூர் அணையின் கோவில் அமைந்துள்ள பாலவாடி கிராம மக்கள் நித்தியானந்தா மீது போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூலலிங்கத்தை நித்தியானந்தா எடுத்து சென்றுவிட்டதாகவும், அதனை அவரே ஒப்புக் கொண்டதால் அவரிடமிருந்து மூல லிங்கத்தை  மீட்டுத்தரவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை மேற்கொள்ளவுள்ளது..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nithyananda #complaint
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story