பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு.! இதுதான் காரணமா?
complaint file on gowtham kampir

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இவர் சமீபத்தில் தன்னை பா.ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில் டெல்லியிலுள்ள 7 தொகுதிகளுக்கு மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் கிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார்.
அதனால் அவர் போட்டியிடும் தொகுதியில் தீவிரமாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் டெல்லியின் ஜங்க்புரா பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் அங்கு அவர் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல், இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் அதிகாரியிடம் உத்தரவிட்டது . இதனையடுத்து தேர்தல் அதிகாரி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை கவுதம் காம்பீர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.