×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லூரி மாணவியிடம் சிக்கிய அந்த பொருள்.. திடுக்கிடவைத்த வாக்குமூலம்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கப்போகும் பிரச்சனை?

Chennai to Mangalore Drug Smuggling: உயர்தர கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.

Advertisement

சென்னையில் இருந்து மங்களூருவுக்கு கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

காவல்துறை விசாரணை:

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர், முல்கி ரயில் நிலைய பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான இளம்பெண் ஒருவரை விசாரித்தபோது, அவர் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரின் உடமைகளை சோதனை செய்தனர். 

இதையும் படிங்க: Nagapattinam: கொலை வழக்கு ஆசாமி கஞ்சா தனிப்படையிடம் கைது.. நடந்தது என்ன? 

Picture: Drugs File

பணத்துக்காக கடத்தல்:

அப்போது, இளம்பெண் ரூ.35 இலட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது செல்போன், கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இளம்பெண் அங்குள்ள சிவமொக்கா மாவட்டம், ஹூளி பகுதியைச் சேர்ந்த சுகானா என்பது தெரியவந்தது. இவர் குந்தாபுரா பகுதியில் செயல்படும் கல்லூரியில் பிசிஏ இறுதி ஆண்டு பயின்று வருகிறார். பணத்துக்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது தெரியவந்தது.

அதிரடி கைது:

கடத்தி வந்த கஞ்சாவை மங்களூரில் இருக்கும் வசதியான நபர்கள், இளைஞர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலருக்கும் அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். கைதான மாணவி மீது ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கு இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் அதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: காதலிக்கு கிப்ட் கொடுக்க ஆடு திருட்டு - தவெக நிர்வாகிக்கு தர்ம அடி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Drugs Smuggling #college student #கல்லூரி மாணவி #போதைப்பொருள் கடத்தல் #மங்களூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story