×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவை சிறுமி கொலை வழக்கில் முதல்வர் விஜய்யிடம்.... தாயார் எழுப்பிய கலங்க வைக்கும் கேள்வி..!!!

கோவை அருகே கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி வழக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் மவுனமாக இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் உடல் கண்ணம்பாளையம் குளக்கரையில் மீட்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் நீதி கேட்டு கண்ணீருடன் போராடி வருகின்றனர்.

இந்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! ஊருக்குள் அரிவாளுடன் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய கும்பல்..! பகீர் வீடியோ..!!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தல்

தகவலின்படி, சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூரச் சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“முதலமைச்சர் ஏன் மவுனம்?”

உயிரிழந்த சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள், முதலமைச்சர் விஜய் இதுவரை தங்களுக்கு ஆறுதல் தெரிவிக்காதது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். “சிறுமி கொலை செய்யப்பட்ட பிறகும் முதல்வர் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசவும் இல்லை” என்று அவர் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை மகளின் உடலை வாங்கமாட்டோம் என்றும் குடும்பத்தினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின்மீதும் குற்றச்சாட்டு

குழந்தை காணாமல் போன சில மணி நேரங்களிலேயே புகார் அளித்தும், போலீசார் துரிதமாகச் செயல்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக கூறி தங்களை சமாதானப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக சிறுமி கொலை வழக்கு தொடர்பாக விரைவான நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

 

இதையும் படிங்க: 6 வயதுசிறுமியை சாக்லேட் ஆசைகாட்டி அழைத்து சென்ற காமுகொடூரன்! அடுத்து நடந்த அதிர்ச்சியால் ஆற்றில் மிதந்த சடலம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore Crime #School Girl Murder #Sulur #vijay #Tamil Nadu Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story