×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் பாட்டுடன் ஓடும் பேருந்தில் டிரைவர் போட்ட கடலை! அருகே அமர்ந்து குஜாலான இளம்பெண்! பார்க்க சகிக்காத லீலைகள்... உயிரை கையில் பிடித்திருந்த பயணிகள்! அதிர்ச்சி வீடியோ..!!!

கோவையில் ஓடும் தனியார் பேருந்தில் டிரைவரின் அருகே இளம்பெண் அமர்ந்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

கோவையில் ஓடும் தனியார் பேருந்தில் இளம்பெண் ஒருவர் டிரைவரின் அருகில் அமர்ந்து பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பேருந்து இயக்கத்தின் போது டிரைவருடன் சிரித்துப் பேசிய காட்சிகள் வெளியாகியுள்ளதால், பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவர் இருக்கை அருகே அமர்ந்த இளம்பெண்

தகவலின்படி, கோவையின் 5-ம் நம்பர் தனியார் பேருந்து டவுன் ஹால் பகுதியில் இருந்து சிவானந்தா காலனியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறிய இளம்பெண் ஒருவர் வழக்கமான பயணிகள் இருக்கையில் அமராமல், நேராக டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள கியர் பாக்ஸ் பகுதியில் அமர்ந்துள்ளார்.

பேருந்து நகர்ந்துக் கொண்டிருந்த போதும், அந்த இளம்பெண் டிரைவருடன் நெருக்கமாக சிரித்துப் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கவனம் சாலையில் இருந்து சிதறியதாகவும், சில பயணிகள் அதிருப்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பார்க்கவே அசிங்கமா இருக்கு.... ரயிலில் தூங்கும் பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்! இதெல்லாம் எப்போ தான் ஒழிய போகுது..... அதிர்ச்சி வீடியோ!!!

பயணிகள் மத்தியில் அதிருப்தி

பேருந்தில் இருந்த ஒருவர் இந்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, வீடியோ குறுகிய நேரத்திலேயே வைரலானது. பலரும், ஓட்டுநரின் கவனச்சிதறல் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பொதுப் போக்குவரத்தில் இதுபோன்ற செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், வைரல் வீடியோ தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படிங்க: #அதிர்ச்சி : நடுரோட்டில் குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்! திடீரென ஆடையை தூக்கி.... பட்டப்பகலில் நடந்த கொடூரம்! சிசிடிவியில் சிக்கிய காட்சி....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #தனியார் பேருந்து #viral video #பேருந்து டிரைவர் #சமூக வலைதளம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story