திடீரென ஏற்பட்ட மயக்கம்! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!
திடீரென ஏற்பட்ட மயக்கம்! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, முதல்வருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மு.க.ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும், அவர் சிறிய உடல்நல பிரச்சனையால் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி, துரைமுருகன், மா. சுப்ரமணியன் ஆகியோர் நேரில் சென்று முதல்வரின் உடல்நிலையைப் பார்வையிட்டனர். தற்போது, முதல்வர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் ஓய்வெடுத்து வருகிறார். இவரது உடல்நிலை குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: அடக்கடவுளே.. இப்படியா நடக்கணும்! வயலில் இருந்து திடீரென அலறி ஓடிய மக்கள்! 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! தென்காசியில் பரபரப்பு...
இதையும் படிங்க: வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பெண்! மர்மமான முறையில் மரணமடைந்த பகீர் சம்பவம்..