இரு கைகளையும் தட்டுவதால் கொரோனா வைரஸ் உயிர் இழக்கும்மா..? என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்?
Clapping together will not destroy coronavirus infection
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 300 கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்தியா முழுவதும் ஒருநாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு, கோவில்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வீட்டிலையே முடங்கி உள்ளனர். இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாலை 5 மணியளவில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் அருகே வந்து தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவ ஊழியர்களை பாராட்டும் வகையில் அனைவரும் கைகளை தட்டுங்கள் என மோடி தனது அறிவிப்பில் கூறியிருந்தார்.
கைகளை தட்டும்போது ஏற்படும் அதிர்வினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும், அதனால்தான் கைகளை தட்ட சொல்வதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மை இல்லை. கைகளை தட்டினாலோ, அதில் ஏற்படும் அதிர்வுகள் மூலமோ கொரோனா வைரஸ் உயிர் இழக்காது என கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை பாராட்டும் நோக்கிலே கைகளை தட்டவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.