×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலை தொங்கியப்படியே ஆட்டோ கால் மிதியில் மகனின் சடலம்! 35 கி.மீ வரை கையாலே பிடித்து கண்ணீருடன் பயணித்த தந்தை...ஏழைனா அவ்வளவு இழக்காரமா போச்சா..?

சத்தீஸ்கரில் அரசு வாகனம் கிடைக்காததால், உயிரிழந்த மகனின் உடலை ஆட்டோவின் கால்மிதியில் வைத்து தந்தை எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு மருத்துவ சேவையின் அலட்சியத்தை வெளிக்காட்டும் சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மகனின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், பின்னர் வீட்டிற்கு திரும்பவும் அரசு வாகனம் கிடைக்காததால், ஏழைத் தந்தை ஒருவர் ஆட்டோவின் கால்மிதியில் சடலத்தை வைத்து எடுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.

மாந்திரீக சிகிச்சைக்கு சென்ற இளைஞர் தற்கொலை

தகவலின்படி, விசேஷ்ரா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். குடும்பத்தின் பொருளாதார நிலையும், போதிய மருத்துவ வசதிகளின் பற்றாக்குறையும் காரணமாக, அவரை அருகிலுள்ள கிராமத்துக்கு மாந்திரீக சிகிச்சைக்காக குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: மருத்துவமனை வாசலில் மனிதக் காலுடன் ஓடிய நாய்! அதிர்ச்சி காட்சியின் உண்மை பின்னணி...!!!

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் ஆட்டோவில் சடலம்

இதற்காக குடும்பத்தினர் பலமுறை ஆம்புலன்ஸ் மற்றும் சடல வாகனம் கோரியிருந்தாலும், எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வேறு வழியின்றி, அந்தத் தந்தை ரூ.2,000 கொடுத்து ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துள்ளார்.

ஆட்டோவில் போதிய இடம் இல்லாததால், மகனின் உடலை கால்மிதி பகுதியில் வைத்து, கீழே விழாமல் தந்தை கையால் பிடித்தபடி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த பொதுமக்களும் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

வீடு திரும்பும்போதும் தொடர்ந்த அவலம்

பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகாவது அரசு தரப்பில் உதவி கிடைக்கும் என குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யாததால், அதே ஆட்டோவில் மீண்டும் உடலை எடுத்துக்கொண்டு கிராமத்திற்குத் திரும்பியுள்ளனர்.

சுமார் 15 கிலோமீட்டர் தூரம், மகனின் உடல் ஆட்டோவிற்கு வெளியே தொங்கியபடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சத்தீஸ்கர் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி ராமேஷ்வர் சர்மா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 1099 சேவையின் மாவட்ட பொறுப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அரசு இலவச ஆம்புலன்ஸ் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் கிராமப்புற ஏழை மக்களுக்கு அவை இன்னும் எட்டாத சேவையாகவே இருக்கின்றன” என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

இதையும் படிங்க: காட்டுக்குள் மலம் கழிக்க சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி! உடல் துண்டு துண்டாகக் வெட்டப்பட்ட நிலையில் ..... தூத்துக்குடி அருகே நடந்த கொடூரம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chhattisgarh #ஆம்புலன்ஸ் சேவை #Auto tragedy #மருத்துவமனை அலட்சியம் #Viral News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story