புழக்கத்திற்கு வரும்.. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள்.. பச்சை கொடி காட்டிய மத்திய அரசு.!
புழக்கத்திற்கு வரும்.. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள்.. பச்சை கொடி காட்டிய மத்திய அரசு.!
இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காகித ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய பாலிமர் (Plastic Polymer) நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் எளிதில் சேதமடையாது. மேலும் கிழிவது, அழுக்காகுவது போன்ற பிரச்சினைகள் குறைவாக இருப்பதுடன், போலி நோட்டுகளைத் தடுக்கும் வகையிலும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாலிமர் ரூபாய் நோட்டுகள் வெற்றிகரமாக பயன்பாட்டில் உள்ளன. அதேபோல் இந்தியாவிலும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா.? வருகிறது புதிய ரூல்ஸ்.. தயாரா இருங்க.!
எனினும், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எந்த மதிப்புகளில், எப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு இதுவரை விரிவான அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி.?! தமிழகமே எதிர்பார்த்த புதிய தகவல்.?!