BREAKING: குட் நியூஷ்! தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு சுமார் 12,000 கன அடி தண்ணீர் பாய்கிறது! காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு..!!!
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி நீரை கர்நாடகா திறக்க வேண்டும். விவசாயிகள் எதிர்பார்ப்பு
டெல்லியில் நடைபெற்ற 55-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விநாடிக்கு சுமார் 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டியுள்ளது.
15 நாட்களுக்கு 15 டி.எம்.சி நீர்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் இரு மாநிலங்களிலும் நீர் இருப்பு கவலைக்கிடமாக உள்ளது. தமிழகத்தின் முக்கிய நீராதாரமான மேட்டூர் அணையிலும் தற்போது சுமார் 40 டி.எம்.சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரவிருக்கும் சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை உறுதி செய்வதில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தி உரிய அளவு தண்ணீரை திறக்குமா என்பதே தமிழக விவசாயிகளின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மழை குறைந்துள்ள நிலையில், நீர் பங்கீடு தொடர்பான இரு மாநிலங்களின் மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழலும் உருவாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற விசாரணையும் நாளை
இதற்கிடையே, காவிரி நீரை திறக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஒரு பக்கம் காவிரி நீர் உத்தரவு வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் உச்ச நீதிமன்ற விசாரணையும் நடைபெற உள்ளது.
மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு செயல்படுத்தப்படுமா, நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்பதில் தமிழக விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் கிடைக்கும் நீர்வரத்து விவசாயிகளின் நிலைமையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
நீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள சூழலில் மேட்டூர் அணை நீர்மட்டம் மற்றும் கர்நாடகாவின் நீர்திறப்பு ஆகிய இரண்டும் தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவும், நாளைய உச்ச நீதிமன்ற விசாரணையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.