பாவம் அந்த மனுஷன்!! வாகன சோதனையின் போது காவலரை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார்!! வைரல் வீடியோ..
காரை சோதனை செய்ய வந்த காவலரை இடித்து தள்ளவிட்டு காரை வேகமாக ஓடிச்சென்ற சம்பவம் பெரும் பரபர

காரை சோதனை செய்ய வந்த காவலரை இடித்து தள்ளவிட்டு காரை வேகமாக ஓடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாட்டின் முக்கியான பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, வாகன சோதனையும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் ஒருவர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை சோதனை செய்வதற்காக காரின் அருகே சென்றுள்ளார். காவலர் அருகே வருவதை பார்த்த காரின் ஓட்டுநர், காவலரை இடித்துத் தள்ளிக் கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கடும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கார் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.