உணவு, தண்ணீர் அருந்த மறுக்கும் ஒட்டகம்! அந்த மர்ம நோய்யால்... வாயைப் பிளந்து உயிருள்ள ராஜநாகத்தை விழுங்கும் ஒட்டகம்!.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!
பாலைவனங்களில் ஒட்டகங்களை தாக்கும் 'ஹாயம்' நோய்க்கு, உயிருள்ள நச்சுப் பாம்பை விழுங்கச் செய்யும் பாரம்பரிய சிகிச்சை முறை இன்னும் சில பகுதிகளில் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
பாலைவனத்தின் முக்கிய போக்குவரத்து மற்றும் வாழ்வாதார விலங்காக இருக்கும் ஒட்டகங்கள், சில நேரங்களில் 'ஹாயம்' எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவை உணவும் தண்ணீரும் அருந்த மறுப்பதால், உடல்நிலை வேகமாக மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகும்.
விசித்திரமான பாரம்பரிய சிகிச்சை முறை
இத்தகைய சூழலில், சில பாலைவனப் பகுதிகளில் வாழும் மக்கள் தலைமுறைகளாக பின்பற்றி வரும் ஒரு அபூர்வ மருத்துவ முறையை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகத்தின் வாயைத் திறந்து, உயிருடன் இருக்கும் நச்சுப் பாம்பை வலுக்கட்டாயமாக விழுங்கச் செய்கிறார்கள்.
பாம்பின் விஷம் ஏற்படுத்தும் மாற்றம்
பாம்பு வயிற்றுக்குள் சென்ற பிறகு அதன் விஷம் உடலுக்குள் பரவத் தொடங்குகிறது. இதன் தாக்கத்தால் ஒட்டகத்திற்கு கடுமையான தாகம் ஏற்பட்டு, உடல் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இதனால் அது நீண்ட நேரம் குடிக்காமல் இருந்த தண்ணீரை அதிக அளவில் அருந்தத் தொடங்குகிறது.
நம்பிக்கையாக தொடரும் பழக்கம்
பாரம்பரிய நம்பிக்கையின்படி, பாம்பின் விஷம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகிறது என்றும், அதன் தாக்கம் குறையத் தொடங்கியதும் ஒட்டகத்தின் பசி மீண்டும் திரும்பி உடல்நலம் சீராகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சிகிச்சை முறைக்கு அறிவியல் ஆதாரங்கள் குறைவாக உள்ளதால், அதன் செயல்திறன் குறித்து கால்நடை மருத்துவ நிபுணர்களிடையே தொடர்ந்து விவாதங்கள் இருந்து வருகின்றன.
இதையும் படிங்க: BREAKING : தவெக அமைச்சர் செங்கோட்டையன் திடீரென மருத்துவமனையில் அவசர அனுமதி! அரசியலில் பரபரப்பு....!!!