×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சட்ட விரோதமாக ஆசியராக நியமனம் பெற்ற அமைச்சரின் மகள்!..நீக்கம் செய்து ஹைக்கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

சட்ட விரோதமாக ஆசியராக நியமனம் பெற்ற அமைச்சரின் மகள்!..நீக்கம் செய்து ஹைக்கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

Advertisement

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஆசிரியராக நியமிக்கப்பட்ட மந்திரியின் மகளை பணியிலிருந்து நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கல்வித்துறை இணை மந்திரியாக இருப்பவர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கடந்த 2011ஆம் ஆண்டு அவருடைய மகள் அங்கிதா அதிகாரியை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.

இதை எதிர்த்து மற்றொரு தேர்வாளர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆசிரியர் பணியிட தேர்வில் அனிதாவைவிட தான் அதிக மதிப்பெண்களை பெற்று இருந்த போதிலும், அந்த இடம் மறுக்கப்பட்டு இருப்பதாக அவர் புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்தது வந்த நீதிபதி அவிஜித் கங்கோபாத்யாய், மந்திரி மகள் அங்கீதா அதிகாரியை நேற்று பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஊதியத்தையும் இரண்டு தவணைகளாக மாநில அரசு கருவூலத்தில் செலுத்தவும் உத்தரவு பிறப்பித்தார். 

மந்திரியின் மகள் சட்டவிரோதமாக ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள விவகாரத்தை சிபிஐயும் விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பரேஷ் சந்திர அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த 17ஆம் தேதி ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 3 மணிக்குள் ஆஜராகுமாறு கொல்கத்தா உயர்தீதிமண்றம் உத்தரவிட்டது. எனினும் அவர் ஆஜராகாததால் அவர் மீதும் மகள் அங்கிதா அதிகாரி மீதும் சிபிஐ அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

நிலையில் நேற்று காலை பத்து முப்பது மணி அளவில் கல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மந்திரி பரேஷ் சந்திர அதிகாரி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். 

சட்டவிரோதமாக மகளை பணியில் அமர்த்திய விவகாரத்தில் மந்திரி பரேஷ் சந்திர அதிகாரிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#west bengal #Culcutta #Minister's Daughter #Teacher Appoinment #Culcutta Highcourt
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story