×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாம்பழம் விற்ற 6-ம் வகுப்பு மாணவி.! திடீரென வந்த தொழில் அதிபர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.!

கடந்த ஆண்டு பரவ துவங்கிய கொரனோ வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் ஊரடங்கு பிறப்

Advertisement

கடந்த ஆண்டு பரவ துவங்கிய கொரனோ வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் இரு ஆண்டுகளாகவே மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி குமாரி என்ற 6-ம் வகுப்பு மாணவியின் தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். குடும்ப வறுமை காரணமாக துள்சி குமாரியிடம், செல்போன் வாங்க வசதி இல்லாததால், அவரால், ஆன்லைனில் படிக்க முடியவில்லை. இதுகுறித்து மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அமியா ஹீட்டே, ஜாம்ஷெட்பூருக்கு வந்து, துள்சியை தேடி கண்டுபிடித்தார்.

இந்நிலையில் சிறுமி மாம்பழம் விற்கும் இடத்திற்கு விரைந்த அவர் துள்சியிடம், ஒரு மாம்பழத்தை ரூ.10 ஆயிரம் வீதம் 12 மாம்பழங்களை வாங்கினார். பின்னர் துள்சி தந்தையின் வங்கி கணக்குக்கு, ரூ.1.2 லட்சத்தை உடனடியாக, ஆன்லைன் வழியாக செலுத்தினார்.

இந்த பணத்தை வைத்து, செல்போன் வாங்கி, ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும் என, துள்சியிடம் அமியா ஹீட்டே கேட்டுக்கொண்டார். மேலும், ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும், துள்சிக்கு அமியா ஹீட்டே வழங்கியுள்ளார். இதனால் அந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் வைரலாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school girl #mango sale
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story