2 ஆண்டுகளாக பெண்ணின் முதுகில் இருந்த அந்த மர்ம பொருள்! அறுவை சிகிச்சையில் போலீசாருக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி!
Bullet found in girl back bone at hydrabad

ஹைதராபாத், பஞ்சகுட்டா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஹசீமா பேகம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடுமையான முதுகு வலியால் துடித்துள்ளார். உடனே அவரை ஹைதராபாத்தில் உள்ள நிஷாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.
ஹஷிமாவின் முதுகு பகுதியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது முதுகில் ஏதோ ஒரு மர்மனான பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார். இதனை அடுத்து அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஹஷிமாவின் தண்டுவடத்தை ஒட்டி கருப்பு நிறத்தில் துப்பாக்கி குண்டு ஓன்று இருந்துள்ளது.
மேலும், மருத்துவர்களின் அறிக்கைபடி துப்பாக்கி குண்டு சுமார் 2 வருடங்களாக ஹஷிமாவின் உடலில் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனனர். இதுகுறித்து ஹஷிமாவிடம் கேட்டபோது துப்பாக்கி குண்டு எப்படி தனது உடலுக்குள் வந்தது என்றே தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். உடனே இதுகுறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஹஷிமா சந்தேகம் அடைந்த போலீசார், அவரது பின்னணி குறித்து விசாரணை நடத்தினர். இதில், ஹஷிமாவின் தந்தையிடம் ஒரு நாட்டு துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. ஆனால், இவரது உடலில் இருப்பது அந்த துப்பாக்கியின் குண்டு இல்லை என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளன்னர்.
இந்நிலையில் தனது உடலுக்குள் குண்டு எப்படி வந்தது என்றே தனக்கு தெரியவில்லை என ஹஷிமா கூறி வருவதால் போலீசாரும், மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளன்னர்