பேஸ்புக் காதலியை முதல் முறையாக பார்த்த வாலிபர்! அடுத்த 4 மணி நேரத்தில் அவர் செய்த காரியம்.
Boy married lover in 4 hours of first meet in kolkata
கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த சுதீப் கோஷல் என்ற வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த பிரித்மா பானர்ஜி என்ற பெண்ணும் முகநூல் மூலம் நண்பர்களாகியுள்ளனர். முன்பின் அறிமுகம் இல்லாத இவர்கள் முகநூல் மூலம் தங்கள் நட்பை வளர்த்ததோடு ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர்.
ஆனால் ஒருவருக்கொருவர்காதலை வெளிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவுமில்லை. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த துர்கா பூஜையில் அந்த பகுதியில் உள்ள கோவிலில் எதேச்சையாக இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த உரையாடலின் முடிவில் சுதிப் தன் காதலை பிரித்மாவிடம் வெளிப்படுத்தினார். பிரித்மாவும் சுதீப்பை ஏற்கனவே காதலித்ததால் அவரது காதலை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தனக்கு சம்பிரதாயங்கள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை, கடவுள் முன்னிலையில் உனது நெற்றியில் பொட்டு வைத்து இப்போதே உன்னை மனைவியாக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதனை பிரித்மா ஏற்றுக்கொள்ள இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
தனது காதலியை முதன் முறையாக பார்த்து அடுத்த 4 மணி நேரத்தில் இளைஞர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது. இந்த தகவல் அவர்கள் பெற்றோர்க்கு தெரிந்ததை அடுத்து அவர்கள் முன்னிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.