தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுநீர் கழிக்கபோன சில வினாடிகளில் தொழில் அதிபரின் சொகுசு காரை ஆட்டைய போட்ட திருடர்கள்!

BMW car theft

BMW car theft Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தின் நொய்டாவில் சமீபத்தில் ஒரு துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறுநீர் கழிக்க நிறுத்திய தொழில் அதிபரின் சொகுசு காரை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷாப் அரோரா என்பவர் அவரின் உறவினர் ஒருவரின் பிஎம்டபிள்யூ காரை சில நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நண்பர் ஏற்பாடு செய்திருந்த மது விருந்திற்கு காரில் சென்ற அவர் அதிக அளவு மது அருந்திவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

car theft

அன்று அவர் வீட்டிற்கு செல்லும்பொழுது இரவு பத்து மணிக்கு மேல், சாலையில் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு சிறுநீர் வந்ததால், சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். 

அந்த சமயத்தில் அவரின் பின்னால் வந்த மர்மநபர்கள், காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டனர். இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த ரிஷாப் பதட்டத்துடன் கார் திருடு போனது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில், போதையில் கார் ஓட்டி வந்ததற்காக ரிஷாப்புக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.போலீசார் காணாமல் போன கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#car theft #bmw
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story