பாஜகவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பாஜக எம்பி கொரோனாவால் மரணம்! கடும் வருத்தத்தில் பிரதமர் மோடி.!
மத்திய பிரதேச மாநிலத்தின் கண்ட்வா தொகுதி மக்களவை உறுப்பினர் நந்த்குமார் சிங் சவுகான், &nbs

மத்திய பிரதேச மாநிலத்தின் கண்ட்வா தொகுதி மக்களவை உறுப்பினர் நந்த்குமார் சிங் சவுகான், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை குருகிராமில் உள்ள மருத்துவமனையில் பாஜக எம்.பி., நந்த்குமார் சிங் சவுகான் மரணமடைந்தார்.
உயிரிழந்த பாஜக எம்.பி., நந்த்குமார் சிங் சவுகானுக்கு வயது 68. கண்ட்வா தொகுதி மக்களவை உறுப்பினர் நந்த்குமார் சவுகானின் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாஜக எம்.பி நந்த் குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கண்ட்வா தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் நந்த்குமார் சிங் சவுகான் மறைந்ததில் வருத்தமடைந்துள்ளேன். பாராளுமன்ற நடவடிக்கைகள், நிறுவன திறன்கள் மற்றும் மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.