×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிறந்தநாள் கொண்டாட்ட கேக்கில் முகத்தை அழுத்தியாதால் நடந்த அதிர்ச்சி...! துடித்துடித்த இளம்பெண்... ஷாக் வீடியோ..!!!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோழிகள் பெண்ணின் முகத்தை கேக்கில் அழுத்தியபோது, உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊசிகள் முகத்தில் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக்கில் முகத்தை அழுத்தியபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊசிகள் குத்தி பெண் ஒருவர் காயமடைந்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழிகள் விளையாட்டாகச் செய்த செயலால், மகிழ்ச்சியாகத் தொடங்கிய கொண்டாட்டம் ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

கேக்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊசிகள்

பிறந்தநாள் விழாவில் பெண் ஒருவர் மெழுகுவர்த்தியை ஊதி கேக் வெட்டத் தயாராக இருந்தார். அப்போது அருகில் இருந்த தோழிகள், விளையாட்டாக அவரது தலையைப் பிடித்து கேக்கிற்குள் அழுத்தினர். ஆனால், கேக்கின் உட்பகுதியில் கூர்மையான சிரிஞ்ச் ஊசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

முகம் கேக்கில் அழுத்தப்பட்ட அடுத்த நொடியே ஊசிகள் குத்தியதால் அந்தப் பெண் காயமடைந்ததார் . இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், சம்பவம் எங்கு நடந்தது, பெண்ணின் உடல்நிலை என்ன என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: இது என்ன அதிசயமா இருக்கு... சேற்றில் சிக்கிய காரை தள்ளும் காளை மாடு..! வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

இணையத்தில் கடும் எதிர்ப்பு

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஒருவரின் முகத்தை வலுக்கட்டாயமாக கேக்கில் அழுத்தும் பழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேக்கிற்குள் ஊசிகளை மறைத்து வைத்தது திட்டமிட்ட செயலாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Zabayar/status/2115643968532656587?a=FksRKZ1A_op8qWwD8Rc&s=20

விளையாட்டு என்ற பெயரில் பிறரின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இணையத்தில் எழுந்துள்ள முக்கியக் கருத்தாக உள்ளது.

 

இதையும் படிங்க: இப்படி ஒரு நிலைமையில் என் மகளை பார்க்க முடியல...! உணவு குழாயில் சிக்கிய ஹேர்கிளிப்.... மகள் படும் வேதனையால் கதறும் தந்தை..! பகீர் காட்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பிறந்தநாள் கொண்டாட்டம் #கேக்கில் ஊசிகள் #Birthday Cake Incident #Hidden Needles #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story