ஐயோ... புள்ள வலி தாங்க முடியாமல் துடிக்குது! அலறி துடித்த மாணவி... . தனியார் பள்ளி ஆசிரியரின் வெறிச்செயல்! கண் கலங்க வைக்கும் காட்சி!!!
பீகாரில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி மாணவியை தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி மாணவி ஒருவரை தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மீனாபூர் பகுதியில் உள்ள ‘டெஜாவூ’ தனியார் பள்ளியில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
தேர்வில் காப்பி அடித்ததாக கூறி தாக்குதல்
மீனாபூர் கிளையில் இயங்கி வரும் பள்ளியில் மாணவி ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். அப்போது அவர் காப்பி அடித்ததாக ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், அந்த மாணவியை ஆசிரியர் கடுமையாக தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
சமூக வலைதளங்களில் எழுந்த கேள்விகள்
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், தனியார் பள்ளிகளில் இதுபோன்ற புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆசிரியர்களின் தனிப்பட்ட கோபம் அல்லது ஆத்திரம் மாணவர்கள் மீது வெளிப்படக்கூடாது என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை கோரிக்கை
இந்த விவகாரம் எக்ஸ் தளத்தில் விவாதமாக மாறியுள்ளது. மாணவியை தாக்கியதாக கூறப்படும் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பீகார் காவல்துறை விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.