கண்கலங்கி பேசிய சுசித்ரா! பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு... உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்!
கண்கலங்கி பேசிய சுசித்ரா! பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு... உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்!
விஜய் டிவியில் பல்வேறு ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பான குடும்பத் தொடர் "பாக்கியலட்சுமி", தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. பாக்கியா, கோபி, மற்றும் இனியா ஆகிய கதாபாத்திரங்களின் சூழ்நிலைகள், தொடரின் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக பாதித்து வருகிறது.
தொடரின் ஒரு கட்டத்தில் கோபியின் மறுமணம் மற்றும் பாக்கியாவின் துயரம், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தற்போது இனியாவின் விவாகரத்து விசயம் முக்கிய திருப்பமாக மாறியுள்ளது. இந்த வார புரொமோவில், பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவடையப்போகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாக்கியாவாக நடித்த நடிகை சுசித்ரா, தனது இன்ஸ்டாகிராம் லைவ் வாயிலாக சீரியல் முடிவைப் பற்றியும், ரசிகர்களின் அன்பும், ஆதரவும் குறித்து பேசினார். அந்த வீடியோவில் அவர் கண்கலங்கிய தோற்றம் ரசிகர்களை மேலும் பாதித்துள்ளது.
இதையும் படிங்க: மூஞ்ச பாரு.. வீடியோ மூலம் சரியான பதிலடி கொடுக்கும் இனியா! திட்டித்தீர்க்கும் வீடியோ வைரல்....
இதையும் படிங்க: முத்துவுக்கு மீனா கொடுத்த சர்ப்ரைஸ்! ஏக்கத்தில் முத்து செய்த காரியத்தை பாருங்க! சிறக்கடிக்க ஆசை புரோமோ..