காதலால் கபளீகரம் செய்யப்பட்ட குடும்பம்.. அம்மா, அப்பா, தங்கை கொடூர கொலை.. ஆடம்பர வாழ்க்கை ஆசையால் பெருங்கொடூரம்.!
Bangalore Father Mother Sister Murder: குடும்பத்தையே கொலை செய்த பெங்களூர் இளம்பெண் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.
காதலருடன் சேர்ந்து குடும்பத்தை திட்டமிட்டு கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பெண்ணின் வாக்குமூலம் அதிகாரிகளை அதிரவைத்துள்ளது.
கொலை சம்பவம்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வருபவர் சோமசுந்தர் (வயது 52). இவரின் மனைவி முத்துலட்சுமி (வயது 48). தம்பதிகளுக்கு சுவேதா (வயது 25), சுப்ரியா (வயது 20) என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். இதனிடையே, சோமசுந்தர், மனைவி முத்துலட்சுமி, இளையமகள் சுப்ரியா ஆகியோர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலை கைவிடாததால் ஆத்திரம்.. தங்கையை அடித்தே கொன்ற சகோதரன்..!
புதுச்சேரியில் கைது:
இந்த விஷயம் தொடர்பாக கே.ஆர். புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதிர்ச்சி திருப்பமாக சுவேதா தனது காதலர் கென்னத் என்பவருடன் சேர்நது குடும்பத்தையே கொலை செய்தது அம்பலமானது. இவர்களை பல இடங்களில் அதிகாரிகள் தேடி வந்த நிலையில், இறுதியாக புதுச்சேரியில் கைது செய்தனர்.
காதல் & ஆடம்பர வாழ்க்கை:
விசாரணையில், பெங்களூரில் வேலை பார்த்து வந்தபோது சுவேதாவுக்கு கென்னத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டுள்ளார். இந்த காதலுக்கு சுவேதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, மதரீதியாக எதிர்ப்பு கிளம்பியதால் 2 மாதங்களுக்கு முன்பு காதல் ஜோடி தனியாக வீடு எடுத்து வாசிக்க தொடங்கியுள்ளது. திருமணம் செய்யாமல் இருவரும் வாழ்க்கையை தொடங்க, ஆடம்பர வாழ்க்கைக்கு பணமும் தேவைப்பட்டுள்ளது.
சொத்துக்காக கொலை?
இதனால் பெற்றோரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கி இருக்கின்றனர். இந்த கடனை திரும்ப செலுத்தக்கூறி சோமசுந்தரின் வீட்டுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து சுவேதாவிடம் பெற்றோர் கேட்கவே, சுவேதா தனக்கு வரவேண்டிய சொத்து பங்கை கொடுத்தால், அதை விற்று ரூ.30 லட்சம் கடனை அடைக்கிறேன் என கூறியுள்ளார். இந்த விஷயத்துக்கு சோமசுந்தர் - முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சமயத்தில் பெற்றோர், தங்கையை கொலை செய்தால் சொத்து முழுவதுமாக தனக்கு கிடைக்கும் என்ற விபரீத எண்ணம் சுவேதாவுக்கு ஏற்படவே, கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் கைதான ஜோடியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவரை தண்ணீர் தொட்டியில் அழுத்திக்கொலை செய்த மனைவி.. கள்ளக்காதலுக்காக பக்கா ஸ்கெட்ச்..!