ரூ.50 லட்சம், நிலம், வீடு வாங்கிட்டு வா.. எஸ்ஐ கணவனை உள்ளே தூக்கி வைத்த வக்கீல் மனைவி.! தரமான சம்பவம்.!
மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக காவல்துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதலிக்கு லவ்யூ மெசேஜ் அனுப்பி, மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
எஸ்ஐ கைது:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் காவல் துறையில், கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் பயரப்பா. இவரின் மனைவி ரேவதி, வழக்கறிஞர் ஆவார். சம்பவத்தன்று ரேவதி தனது கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி தொடர்பாக கெங்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவன்.. துள்ளத்துடிக்க கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.!
கொலை முயற்சி:
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து பயரப்பாவை கைது செய்த நிலையில், விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஜூலை 12ம் தேதி தம்பதிகளுக்குள் நடந்த பிரச்னையின்போது, காவல் உதவி ஆய்வாளர் பயரப்பா ரேவதி மற்றும் அவரின் தந்தையை வெட்டிக்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதன்பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 லட்சம், வீடு, நிலம்:
தம்பதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 3 வயதுடைய பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 3 ஆண்டுகளாக இவர்களின் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்னையும் இல்லாத நிலையில், பயரப்பா ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளார். மேலும், வீடு, நிலம் வாங்கித்தர வேண்டும் என்றும் சித்ரவதை செய்துள்ளார்.
லவ்யூ மெசேஜ்:
மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் பயரப்பா மனைவியுடன் பிரச்சனை செய்வதை வாடிக்கையாக்கிய நிலையில், இன்ஸ்டாகிராமில் பெண்களுடன் பேசி லவ்யூ மெசேஜ் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனை ரேவதி கேட்டபோது அவரையும், குழந்தைகளையும் தாக்கி அவதூறு பேசி இருக்கிறார். பயரப்பா ஏற்கனவே தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மனைவி அளித்த புகாரின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தூக்க மாத்திரை கொடுத்து கணவர் கொலை.. கள்ளக்காதலுக்காக மனைவி ஷாக் செயல்.!