×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீயெல்லாம் ஒரு அம்மாவா..? பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற தாய்! அதுவும் எதுக்காக தெரியுமா..? பகீர் சம்பவம்..!!!

பெங்களூருவில் தனது உறவை எதிர்த்த 24 வயது மகனை, ஆண் நண்பர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து தாய் கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. வழக்கில் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தனது திருமணத்தை மீறிய உறவை எதிர்த்த 24 வயது மகனை, ஆண் நண்பருடன் சேர்ந்து தாயே கொலை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.டி. நகரைச் சேர்ந்த விஜய் நாராயணன் என்பவரே கொலை செய்யப்பட்டவர். இந்த வழக்கில் அவரது தாய் மீனா நாராயணன் (44), அவரது ஆண் நண்பர் ராகேஷ் ஜமுனி (34) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாயின் உறவை எதிர்த்ததால் அடிக்கடி தகராறு

பெங்களூருவில் மீனா நாராயணன் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு அவரது கணவர் உயிரிழந்த நிலையில், குடும்பச் சொத்துகள் மூலம் வாடகை வருமானமும் கிடைத்து வந்துள்ளது. இதற்கிடையே, தனது காரின் ஓட்டுநரான ராகேஷ் ஜமுனியுடன் மீனாவுக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காலம் கெட்டு போச்சு! 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! கதறும் குடும்பம்... போராட்டத்தில் திரண்ட கிராம மக்கள்...!!!

பட்டதாரியான அவரது மகன் விஜய் நாராயணன், தாயின் இந்த உறவை விரும்பவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது உறவுக்கும், குடும்பச் சொத்துகளை அடைவதற்கும் விஜய் தடையாக இருப்பார் என நினைத்த மீனாவும் ராகேஷும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கொலை

இதையடுத்து, கடந்த நவம்பர் 1ஆம் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா விழாவைக் காட்டுவதாகக் கூறி விஜய்யை பெங்களூருவிலிருந்து பெலகாவிக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ராகேஷின் நண்பர்களும் இவர்களுடன் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவலின்படி, காருக்குள்ளேயே விஜய்யின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வடிகால் கால்வாயில் வீசிவிட்டுச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

செல்போன் அழைப்புகள் மூலம் வெளியான உண்மை

நவம்பர் 3ஆம் தேதி கால்வாயில் கிடந்த இளைஞரின் உடலை போலீசார் மீட்டனர். முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த உடலை, பின்னர் மீனா நாராயணன் நேரில் வந்து தனது மகனுடையது என அடையாளம் காட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்போன் அழைப்புகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்தபோது கொலைக்கான சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மீனா, ராகேஷ் உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது உறவை மகன் எதிர்த்ததால், அவரைக் கொலை செய்ய தாயே திட்டமிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பங்கு மற்றும் கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா.? தொப்புளில் பட்டாசு வைத்து தீப்பொறியை பறக்கும் விட்ட பெண்! இறுதியில் நடந்த அதிர்ச்சி... பகீர் காட்சி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெங்களூரு மகன் கொலை #தாய் உட்பட 6 பேர் கைது #கர்நாடகா கொலை வழக்கு #Bengaluru Murder Case #Karnataka Crime News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story