×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிப்பாவி..பால் குடிக்காமல் அழுத பச்சிளம் குழந்தை! கோபத்தில் தாய் செய்த கொடூர செயல்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்‌..

அடிப்பாவி..பால் குடிக்காமல் அழுத பச்சிளம் குழந்தை! கோபத்தில் தாய் செய்த கொடூர செயல்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்‌..

Advertisement

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நெலமங்களா பகுதியில் நடந்த மாயமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இங்கு வசித்து வந்த ராதாமணி என்ற 25 வயது பெண்,குறை மாதத்தில் பிறந்த ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் நிலை

38 நாட்களுக்கு முன் ராதாமணிக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஹேமந்த் குமார் என பெயர் வைத்தனர். குழந்தை ஆரோக்கியமாக இல்லாததால், அடிக்கடி பால் குடிக்காமல் அழுது கொண்டிருந்தது, இது ராதாவுக்கு மன அழுத்தமாக மாறியது.

கணவனின் மதுபழக்கம்

ராதாவின் கணவருக்கு மதுபழக்கம் இருந்ததினால், குழந்தையின் அழுகையையும் பெரிதாக கவனிக்கவில்லை. ராதா, சம்பவ நாளில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த போது, குழந்தை தொடர்ந்து அழுதது.

இதையும் படிங்க: தலைக்கேறிய மது போதை! 2 வாலிபர்களுடன் ஒரே அறையில் இருந்த இளம்பெண்கள்! கண்விழித்துப் பார்த்த போது நடந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்...

வெந்நீரில் குழந்தையை கொலை செய்த தாய்

தொடர்ந்து அழுத குழந்தையை பார்த்த ராதா, மனநல தடுமாற்றத்தில், கொதிக்கும் வெந்நீரில் குழந்தையை போட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் விசாரணை

சம்பவம் தொடர்பாக பொலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராதா கைது செய்யப்பட்ட நிலையில், இது மன அழுத்தத்தின் விளைவாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தாய்மாரின் மனநிலை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.

 

இதையும் படிங்க: Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதியதால் கோர விபத்து! மாணவர்களின் நிலை என்ன? கடலூரில் பரபரப்பு.....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெங்களூரு சம்பவம் #baby murder Bengaluru #ராதாமணி குழந்தை கொலை #mental stress mother #karnataka
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story