ஒரு தொழிலதிபரே நடுரோட்டில் பல கோடி ரூபாய் காரை நிப்பாடி செய்த செயலை பாருங்க! மாநகராட்சியின் மூக்கை உடைத்த சம்பவம்.... வைரலாகும் வீடியோ..!!
பெங்களூருவில் சாலைப் பள்ளத்தை போர்ஷே காரில் சிமெண்ட் கலக்கி மூடிய தொழிலதிபர் வீடியோ வைரலாகி, மாநகராட்சி அலட்சியத்துக்கு கேள்வி எழுப்புகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலைப் பள்ளத்தை மூடும் விதத்தில் ஒரு தொழிலதிபர் எடுத்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பல கோடி மதிப்புள்ள ‘போர்ஷே’ காரையே பயன்படுத்தி அவர் சிமெண்ட் கலக்கி பள்ளத்தை மூடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நகரின் சாலை நிலைமை மீதான அதிருப்தியை இந்த செயல் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
போர்ஷே காரில் சிமெண்ட் கலவை
வைரலாகும் வீடியோவில், அந்த தொழிலதிபர் தனது சொகுசு காரை பெரிய பள்ளம் அருகே நிறுத்துகிறார். பின்னர், காரின் முன்பகுதியில் சிமெண்ட் மற்றும் மணலை பரப்பி, குடிநீர் பாட்டிலில் இருந்த நீரை ஊற்றி கலக்குகிறார். இந்த காட்சியே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்பின் தயாரான கலவையை எடுத்துக்கொண்டு, சாலையில் இருந்த பள்ளத்தை அவர் மூடுகிறார். அங்கிருந்தவர்கள் இதைப் பார்த்து வியப்புடன் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை டியூட்டி ரூமில் காதலியுடன் குத்தாட்டம் போட்ட மருத்துவர்! பணி நேரத்தில் ஆட்டத்தை பாருங்க... அதிர்ச்சி வீடியோ..!!!
அதிகாரிகளுக்கு மறைமுக எதிர்ப்பு?
சாலை பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக நீண்டநாளாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை ஒரு மறைமுக எதிர்ப்பாக பார்க்கப்படுகிறது. “ஒரு தொழிலதிபரே இறங்கி வந்து பள்ளம் மூட வேண்டிய நிலைதானா?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
வைரலான காட்சி, எழுந்த கேள்விகள்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே கார் பயன்படுத்தி சிமெண்ட் கலக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது. இதனால் பெங்களூருவின் சாலைப் பள்ளம் பிரச்சனை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.