நடுரோட்டில் பெண்ணிடம் கத்தியை காட்டி தகராறு செய்த நபர்.... திடீரென வந்த இளையர்! அடுத்த நொடி அப்படியே மாறிய தருணம்... வைரலாகும் வீடியோ!!!
பெங்களூருவில் பட்டப்பகலில் இளம் பெண்ணை கத்தியால் மிரட்டிய மர்ம நபரை, சிறுவன் ஒருவரின் துணிச்சலால் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெங்களூரு மடநாயக்கனஹள்ளியில் பட்டப்பகலில் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் ஒருவர், சாலையில் சென்ற இளம் பெண்ணை வழிமறித்து கத்தியால் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், அங்கிருந்த சிறுவன் ஒருவரின் தைரியமான செயலால் நிலைமை சில நிமிடங்களிலேயே மாறியது.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும், அருகில் இருந்த சிறுவன் தயங்காமல் ஓடி வந்து அந்த நபரை பின்னால் இருந்து தாக்கியுள்ளார். இதனால் மர்ம நபர் சில நொடிகள் தடுமாறிய நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக ஒன்று திரண்டனர்.
சிறுவனின் தைரியம் திருப்புமுனை
தகவலின்படி, சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் வழக்கம்போல் மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டியதால் முதலில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிறுவன் எடுத்த அந்த ஒரு முயற்சி பொதுமக்களுக்கும் தைரியம் கொடுத்தது.
இதையும் படிங்க: பார்க்கவே அசிங்கமா இருக்கு....மாணவியுடன் மதபோதகர் செய்த அருவருப்பான செயல்! சிக்கிய சிசிடிவி காட்சியால் பெற்றோர்கள் போராட்டத்தில்...!!!
அதன்பின் அருகில் இருந்த இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் இணைந்து அந்த நபரை சுற்றிவளைத்தனர். இதனால் தப்பிச் செல்ல முயன்ற அவன் அங்கேயே சிக்கிக் கொண்டான்.
பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக வந்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்த தாக்குதலில் யாரும் உதவிக்கு வராத சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது ஒரு சிறுவனின் துணிச்சல் மற்றும் பொதுமக்களின் உடனடி செயல், ஒரு பெண்ணை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
வைரலாகும் சம்பவ வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பலரும் அந்த சிறுவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டது பெங்களூரு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.