×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனுஷனாடா நீ? வலுக்கட்டாயமாக பெண்ணை மிரட்டி.... சித்திரவதை செய்து வீடியோ வெளியிட்ட சைக்கோ! கழிவறையில் இருந்து குடும்பத்தினரிடம் கதறிய பெண்... ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்..!!!

பீகார் பெகுசராயில் வேலைக்காக சென்ற பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக ரோஹித் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற பெண், ஏமாற்றி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளார். செப்டம்பர் 27-ம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ரோஹித் குமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற நபர்

புகாரின்படி, சுழல்நிதி மற்றும் சுயஉதவிக் குழு பணியில் ஈடுபட்டு வரும் அந்தப் பெண், செப்டம்பர் 27 அன்று வழக்கமான வேலைக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு அறிமுகமான ஒருவர், உதவி செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஹோட்டல் ப்ளூ டைமண்ட் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பகவான்பூர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ரோஹித் குமாரிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்ததாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்னை விடுடா... கதற கதற கெஞ்சிய பெண்! விடுதி அறையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..! அறையில் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து.... குற்றவாளியை அலசும் போலீஸ்...!!!

அறைக்குள் அடைத்து தாக்கியதாக புகார்

இதையடுத்து, ரோஹித் குமார் அந்தப் பெண்ணை ஹோட்டல் அறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கதவை பூட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் தனது செல்போனை மேசையில் வைத்து, பெண்ணை காலணிகள் மற்றும் கைகளால் தாக்கி வீடியோ பதிவு செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமுடியைப் பிடித்து இழுத்தும் அவதூறாக பேசியும் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

கழிவறையில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல்

நீண்ட நேரத்துக்குப் பிறகு, கழிவறைக்குச் செல்வதாகக் கூறி அங்கு சென்ற பெண் கதவை மூடிக்கொண்டு தனது செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தான் இருக்கும் இடம் குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் உடனடியாக ஹோட்டலுக்கு வந்து அவரை மீட்டனர். அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பெண்ணை தாக்கிய வீடியோவை ரோஹித் குமார் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28 மாலை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரோஹித் குமாரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இதுதாண்டா சரியான நேரம்..! தனிமையில் இருந்த காதல் ஜோடி.! காதலியை குண்டுகட்டாக தூக்கி அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு... அராஜகம் செய்த ரவுடி கும்பல்..! அதிர்ச்சி வீடியோ...!!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெகுசராய் பெண் #Bihar Crime #Hotel Assault #ரோஹித் குமார் #Begusarai Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story