தனியாக வந்த தலை, வயிற்றுக்குள் உடல்! பிரசவத்தின் போது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!
Baby neck cut while delivery in hospital

தெலுங்கானா மாநிலம் நாடிம்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது சுவாதி. நிறைமாத கர்ப்பிணியான இவர் அந்த அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாதிக்கு சுகப்பிரசவம் ஆகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சுவாதிக்கு பிரசவ வலி வந்ததை அடுத்து அவர் பிரசவ அறைக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர்கள், பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக கூறி சுவாதியை கைதராபாத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துசெல்லுமாறு கூறியுள்ளனனர்.
உறவினர்களும் சுவாதியை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு சுவாதியை சோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலாவதாக சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் குழந்தையை வெளியே எடுக்கும்போது அதன் தலை துண்டிக்கப்பதும், குழந்தையின் இறந்த உடல் மட்டுமே தாயின் வயிற்றில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஷயம் அறிந்த சுவாதியின் உறவினர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவமனையை அடித்து நொறுக்கியதோடு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.