நடுவானில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்.. பதறிய பயணிகள்.. கடவுள் மாதிரி வந்த சக பயணி..
விமானத்தில் பறந்துகொண்டிருந்த பெண் ஒருவருக்கு பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து விமான கேபின் குழு
விமானத்தில் பறந்துகொண்டிருந்த பெண் ஒருவருக்கு பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து விமான கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது.
இண்டிகோ 6E 460 என்ற விமானம் பயணிகளை என்றிக்கொண்டு இன்று அதிகாலை 5.45 மணிக்கு பெங்களுருவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது.
வலியால் அந்த பெண் கதறியதை அடுத்து, அதே விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த மருத்துவர் சுபகானா நசீர் என்பவர் அப்பெண்ணுக்கு உதவ முன்வந்தார். பின்னர் விமானத்தின் கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன் மருத்துவர் சுபகானா நசீர் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். இதில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை அடுத்து விமானி ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கு மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸுடன் தயாராக இந்தநிலையில், விமானம் 8 மணிக்கு ஜெய்ப்பூரை வந்தடைந்தது. இதனை அடுத்து குழந்தை மற்றும் தாய்யை அம்புலன்ஸ் மூலம் விமான நிலைய ஊழியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் நடுவானில் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் சுபகானா நசீர் அவர்களுக்கு இண்டிகோ நிறுவனத்தினர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாராட்டு தெரிவித்தனர்.